வாட்ஸ் அப் பிஸ்னஸ் சேவை சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முதல் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் வாட்ஸ் அப் பிஸ்னஸ் அம்சம் தற்சமயம் உள்ள செயலியில் சேர்க்கப்படாமல் புதிய சேவைக்கென பிரத்தியேக செயலி வெளியிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.


புதிய வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியும் வழக்கமான சாட் செயலி போன்ற இன்டர்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாட்ஸ்அப் செயலி போன்றே அழைப்புகள், சாட் மற்றும் ஸ்டேட்டஸ் உள்ளிட்ட வசதிகள் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 


இந்த சேவையில் பிஸ்னஸ் பெயர், இருப்பிடம், வெரிபை செய்யப்பட்டதும் வெரிபை செய்யப்படாததை குறிக்கும் பேட்ஜ், மின்னஞ்சல் முகவரி, வலைத்தள முகவரி, வியாபாரம் சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை பதிவிட முடியும் என கூறப்படுகிறது.


இத்துடன் ஒவ்வொருத்தருக்கு ஏற்ற வியாபாரங்களை தேர்வு செய்ய பல்வேறு பிரிவுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.