விரைவில் Anroid பயனர்களுக்கு WhatsApp-ன் புதிய அப்டேட்!!
வாட்ஸ்அப் செயலியில் Group-களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் Group-களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அம்சமானது Group Video Call என்றும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்-ன் புதிய அம்சங்களை குறித்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் "WABetaInfo" இந்த புதிய அம்சம் சார்ந்த விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது.
அதன்படி வாட்ஸ்அப் Group Video Call வசதி விரைவில் வழங்கப்படலாம் எனவும் இந்த அம்சம் மூலம் ஒரே சமயத்தில் பலருக்கும் Video Call மேற்கொள்ள முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் Group Video Call அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.
அனால் இந்த அம்சம் வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் Group Video Call முதற்கட்டமாக Anroid இயங்குதளத்திற்கு வழங்கப்பட்டு பின் IOS இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என WABetaInfo தகவல் வெளியிட்டு உள்ளது.