உலகளவில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு
ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே `ஃபார்வர்ட்` செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' செய்ய முடிகின்ற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ் அப் உலகளாவிய ரீதியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உடனடி செய்தி சேவை ஆகும். வாட்ஸ் அப் தற்போது தொடர்ந்து அப்டேட்களை செய்து வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் இந்திய அரசின் உத்தரவை அடுத்து, வாட்ஸ் அப் நிறுவனம் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே 'ஃபார்வர்ட்' முடியுமான வகையில் கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில் தற்போது இந்தக் கட்டுப்பாடு உலக அளவில் அனைத்து நாட்டிலும் உள்ள வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்களிடம் அமல்படுத்தப்பட்டுள்ளது.