வாட்ஸ்அப் செயலி, தகவல் பரிமாற்றம் மற்றும் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பும் மீடியமாக மட்டுமல்லாமல், ஆடியோ வீடியோ அழைப்புகள் என அதனை பயன்படுத்தும் பயனர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். இந்நிலையில், சாதாரண தொலைபேசி அழைப்புகளில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, வாட்ஸ் அப் செயலியிலும், மிக அதிகமாக ஸ்பேம் மெஸ்சேன்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு அவ்வப்போது புதிய அம்சங்களை வெளியிட்டு வரும் நிலையில், விரைவில் ஸ்பேம் தகவல் பிரச்சனைக்கும் முடிவு கட்ட, வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வர உள்ளது. முன் பின் தெரியாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்கும் அம்சம் வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Block unknown accounts messages என்ற இந்த அம்சம் WhatsApp-ல் அறியப்படாத கணக்குகளிலிருந்து உங்களுக்கு வரும் செய்திகளை பிளாக் செய்யும். இந்த அம்சம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


அறியப்படாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகள் தடுக்கும் அம்சம்
 
Wabetainfo சமூக வலைதளத்தில் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ள இந்த புதிய அம்சம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அறியப்படாத கணக்குகளில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க புதிய அம்சம் உதவும். இந்த அம்சத்தின் மூலம், WhatsApp பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்பை விட வலுவாக இருக்கும் என கூறப்படுகிறத்யு. இது தவிர வாட்ஸ்அப்பில் வரும் ஸ்பேம் மெசேஜ்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். புதிய அம்சத்திற்கான செட்டிங்கை ஆன் செய்த பிறகு ஸ்பேம் செய்திகளில் இருந்து விடுதலை பெறுவதை தவிர, கூடுதலாக உங்கள் மொபைலில் சேமிப்பகம் விரைவாக நிரம்புவதால் ஏற்படும் ஸ்டோரேஜ் பிரச்சனையும் முடிவுக்கு வரும்.


மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!


வாட்ஸ் அப் புதிய அம்சத்தின் ஸ்கிரீன்ஷாட்டும் அறிக்கையில் பகிரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மேம்பட்ட செட்டிங் அமைப்புகளில் தெரியாத கணக்கு செய்திகளைத் பிளாக் செய்யும் வசதியை பெறுவார்கள் என்பதை ஸ்கிரீன்ஷாட்டில் காணலாம். இந்த மாற்றத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, தெரியாத கணக்கிலிருந்து வரும் செய்திகளின் வரம்பை மீறினால், WhatsApp தானாகவே அந்தக் கணக்கைத் பிளாக் செய்யும். அந்தக் கணக்கை நீங்கள் தனியாகத் பிளாக் வேண்டியதில்லை.



 


தற்போது இந்த அம்சம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் நிலையில் உள்ளது. உடனடி செய்தியிடல் தளம் அதன் பயனர்களுக்கு இந்த அம்சத்தை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இந்த அம்சம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால்,இது அறிமுகமாகும் சமயத்தில் கூடுதல் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | அட்டகாசமான விலையில் சாம்சங் கேலக்ஸி A55 5G ஸ்மார்ட்போன்! நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ