இலவச நெட்ஃபிளிக்ஸ் சலுகை: ஜியோ, ஏர்டெல் இரண்டில் எது பெஸ்ட்?
Free Netflix: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி பார்க்க விரும்புவர்களுக்கு ஜியோ, ஏர்டெல் இரண்டு டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரீச்சார்ஜ்ஜில் எது பெஸ்ட் என்பதை தெரிந்து கொள்வோம்.
இதுவரை ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் ரீச்சார்ஜ் திட்டங்கள் மூலம் குறைந்த விலையில் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் கொடுக்கும் விதமாக பெரும்பாலான ரீச்சார்ஜ் திட்டங்களில் இருந்து, இலவச நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை நீக்கியுள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் நெட்ஃபிக்ஸ் பார்க்க இலவச ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?. கவலைப்படாதீர்கள் உங்களுக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் ப்ரீப்பெய்டில் ஒரு ரீச்சார்ஜ் திட்டங்களை வைத்திருக்கின்றன. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.
ஜியோ ரூ.1099 ப்ரீப்பெய்ட் திட்டம்
ஜியோவின் இந்த ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் மொத்தம் 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதாவது தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா. அதிவேக டேட்டா தீர்ந்த பிறகும், 64 Kbps மெதுவான வேகத்தில் அன்லிமிடெட் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தில், அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன், 5G நெட்வொர்கையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி
இந்த ஜியோ திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தா இலவசமாகக் கிடைக்கிறது. அதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த தடையுமின்றி நிறைய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இப்போது சொந்த Netflix கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
ஏர்டெல் ரூ.1499 ப்ரீப்பெய்ட் பிளான்
ஏர்டெல்லின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டமும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில், ஒரு நாளைக்கு 3 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் நெட்ஃபிக்ஸ் இலவசமாக பார்க்கலாம். நீங்கள் Apollo 24X7 Circle சந்தாவை இலவச Wynk Music, Hello Tunes ஆகியவற்றை பெறுவதுடன் உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் கிடைத்தால் அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த பிளான் உங்களுக்கு பெஸ்ட்?
இரண்டு திட்டங்களும் நன்றாக உள்ளன. ஜியோ பயனர்கள் 1099 ரூபாய் மற்றும் ஏர்டெல் பயனர்கள் 1499 ரூபாய் திட்டத்தை எடுக்கலாம். உங்களிடம் இரண்டு சிம்களும் இருந்தால், முன்னுரிமையின் அடிப்படையில் ரீச்சார்ஜ் பிளான்களை தேர்வு செய்து ரீச்சார்ஜ் செய்யுங்கள். இரண்டு திட்டங்களும் 84 நாட்கள் வேலிடிட்டி தான். ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் ஜியோவின் திட்டம் கொஞ்சம் விலை குறைவானது. ஏர்டெல்லின் திட்டம் விலை கொஞ்சம் அதிகம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ