சமூகவலைதளத்தின் ஜாம்பவனாக இருக்கும் பேஸ்புக்கிற்கு எதிராக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. போட்டி நிறுவனங்களை வளரவிடுவதில்லை, மார்க்கெட்டை குறுக்கு வழிகளில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முக்கியமாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க டிரேட் பெடரேஷன் கடந்த காலத்தில் தொடர்ந்த வழக்கை, உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இதே குற்றச்சாட்டில் புதிய வழக்கை அமெரிக்க டிரேட் பெடரேஷன் மீண்டும் கையில் எடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Omicron: மரணபீதியை ஏற்படுத்தும் BA.2 வேரியண்ட்..! இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு


அதில், பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா சிறு நிறுவனங்கள் சந்தையில் நீடித்திருக்காமல் செய்கிறது அல்லது அதனை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறது என தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் இந்த செயல்பாடுகளால் போட்டி நிறுவனங்கள் தலைத்தூக்க முடிவத்தில்லை. ஒன்று பேஸ்புக்கிடம் சரண்டைய வேண்டியுள்ளது அல்லது சந்தையில் காணாமல் ஆக்கப்படுகிறது என அமெரிக்க பெடரேஷன் டிரேட் குற்றம்சாட்டியுள்ளது


ALSO READ | Business: மார்க் ஜுக்கர்பெர்க் - சுந்தர் பிச்சை கூட்டு? வியாபார தந்திரமா? அதிர்ச்சி வழக்கு!


இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பல முறையில் நேரில் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், இந்த முறை அமெரிக்க டிரேட் பெடரேஷன் தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து, வழக்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த முறை அமெரிக்க டிரேட் பெடரேஷன் தொடர்ந்த வழக்கில் உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. ஆனால் இந்த முறை போதுமான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், இந்த வழக்கு நீண்ட காலத்துக்கு இழுக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அமெரிக்க டிரேட் பெடரேஷன் இந்த வழக்கில் வெற்றி பெற்றால் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை பேஸ்புக் கட்டாயம் விற்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR