Blackberry போன்கள் ஏற்கனவே சந்தையில் அதன் பொலிவை இழந்துவிட்டது, இதன் பயனர்கள் பலரும் தற்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  இருப்பினும் ஒருசிலர் இன்னும் Blackberry போன்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.  இந்நிலையில் கனடிய நிறுவனம் செல்லுலார்(cellular) அல்லது wifi உதவியுடன் இவற்றை அடுத்த வாரத்திலிருந்து பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இன்டர்நெட் இல்லாமல் Google Map பயன்படுத்துவது எப்படி?


இந்நிறுவனம் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே இந்த பயன்பாட்டை நிறுத்தப்போவதாக கூறிய நிலையில் ஒருசில பயன்பாட்டாளர்களுக்காக கொஞ்ச நாட்கள் நீட்டிப்பு செய்தது.  மேலும் இந்த செயல்முறை ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் Blackberry போன்களுக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளது.   வரும் ஜனவரி-4 முதல் BlackBerry 7.1 OS,  BlackBerry 10, BlackBerry PlayBook OS 2.1 மற்றும் இதர பழைய வெர்ஷன்கள்  இனிமேல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது அந்நிறுவனம் அதன் அதிகாரபூர்வமான வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.  அதாவது செல்லுலார்(cellular) அல்லது wifi உதவியுடன் இயங்கும் BlackBerry போன்களில் அழைப்புகள், குறுஞ்செய்தி அனுப்புதல், அவசர அழைப்பு எண்ணான 911 ஆகியவற்றை கூட செய்யமுடியாது, அதற்கு கேரன்டியும் இல்லை.



ஒன்டாரியோவைத் தலைமையிடமாகக் கொண்ட வாட்டர்லூ என்கிற நிறுவனம் மீண்டும் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.  2013 ஆம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களைக் கவரும் வகையில் பழைய மாடலான BlackBerry OSக்கு பதிலாக BlackBerry 10 ஐ அறிமுகப்படுத்தியது.  பின்னர் இறுதியாக இந்த நிறுவனம் ஆண்ட்ராய்டுக்கு மாறி 2015-ல் ஆப்பிள் மற்றும் சாம்சங்கை வெல்ல புதிய ஸ்லைடர் போனாக BlackBerry Priv ஐ கொண்டு வந்தது.   ஆனால் இந்த முயற்சியும் வெற்றிவில்லை.  


அடுத்ததாக 2016-ல் BlackBerry உலக சந்தையில் தனது பெயரை நிலைநாட்ட TCL கம்யூனிகேஷன் மற்றும் இந்தியாவில் Optiemus Infracom உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்தது.  இந்த கூட்டணியின் மூலம்  BlackBerry KeyOne மற்றும் Key2 மாடல்கள் அறிமுகப்படுத்தபட்டது.  இருப்பினும்,  TCL  கடந்த பிப்ரவரி 2020-ல் இனி BlackBerry போன்களை உற்பத்தி செய்யப்போவதில்லை என்று அறிவித்தது.  2020-ல் ஸ்டார்ட்அப் ஆன்வர்ட்மொபிலிட்டி 2021-ல் 5G BlackBerry போனை அறிமுகப்படுத்த நினைத்தது, ஆனால் அந்த மாடல் இன்னும் வெளிவரவில்லை.  இதுபோன்ற சில காரணங்களால் இந்நிறுவனம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை, அதன் பிராண்டை உலக சந்தையில் நிலைநிறுத்த பல்வேறு புதுமைகளை புகுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Flipkart Sale: வெறும் ரூ.5,000-க்கு கிடைக்கிறது 32 இன்ச் Smart TV


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR