பேஸ்புக் அடுத்த மாஸ் அறிவிப்பு; வாட்ஸ்அப் இல் புதிய அப்டேட்
சுமார் ஒரு மில்லியன் விளம்பரதாரர்கள் தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் `வாட்ஸ்அப் கிளிக்` விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய அம்சங்களை அதன் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக ஒரு அப்டேட் ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் தற்போது 'modern-day Yellow Pages' உருவாக்குவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது, இதன் மூலம் உள்ளூர் வணிகங்களின் தொடர்புகளை பயன்பாட்டிலேயே நாம் பார்க்க முடியும்.
வாட்ஸ்அப் இன் புதிய அம்சம் பிரேசிலின் சாவோ பாலோவில் (São Paulo, Brazil) இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கூடுதல் விவரம் இன்னும் வெளியாகவில்லை.
Also Read | ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை யாரெல்லாம் செக் பண்ண முடியாது
இருப்பினும் ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வாட்ஸ்அப் இந்த புதிய சோதனை சாவோ பாலோ சுற்றுப்புறங்களில் உணவு, சில்லறை மற்றும் உள்ளூர் சேவைகள் போன்ற வகைகளில் ஆயிரக்கணக்கான வணிகங்களை உள்ளடக்கும் என்று கூறியுள்ளது. இந்த அம்சத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியாவும் இந்தோனேஷியாவும் அடுத்த நல்ல கேண்டிடேட் ஆக இருக்கும் என்று பேஸ்புக்கின் பிசினஸ் மெசேஜிங் துணைத் தலைவர் மாட் ஐடெமா கூறினார்.
Yellow Pages அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது, அதில் யார் பதிவு செய்திருந்தாலும் தொடர்பு விவரங்களைப் பார்க்க மக்களுக்கு உதவுகிறது. உள்ளூர் வணிகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது, மக்கள் கூகிள் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலல்லாமல், அதன் பயன்பாட்டில் விளம்பரங்களை இயக்காது. இருப்பினும், எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டு விளம்பரங்களை அறிமுகப்படுத்தும் சாத்தியத்தை ஐடிமா நிராகரிக்கவில்லை.
Also Read | Govt Vacancies Available: அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கு ஏற்ற வேலை இதுவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR