சீனாவை மையமாக கொண்டு இயங்கும் Xiaomi ஆனது இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை விற்க தானியங்களி வெண்டிங் மெஷினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக Xiaomi நிறுவனத்தின் படைப்பான Mi Express Kiosks-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Mi Express Kiosks என்பது பெரிய ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கு வெண்டி மெஷின் போன்றது. சூப்பர் மார்கெட்டில் இருக்கும் வெண்டிங் மெஷினுக்குள் மிட்டாய்கள் மற்றும் பல உணவு பண்டங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த மெஷினில் பணத்தை செலுத்தி, நமக்கு வெண்டுமென்கிற பண்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.


இதே முறையில் தனது ஸ்மார்ட்போன்களை விற்க Mi Express Kiosks என்ற பெயரில் வெண்டிங் மெசின்களை Xiaomi அறிமுகப்படுத்தவுள்ளது. Xiaomi-யின் இந்த திட்டம், வாடிக்கையாளர்களின் செலவை குறைக்கவும் மற்றும் அவர்கள் எளிதில் ஸ்மார்ட்போன்களை பெறவுமே துவங்கப்பட்டுள்ளது. 


இந்த Mi Express Kiosks வெண்டிங் மெசின் மூலம், வாடிக்கையாளர் தங்கள் அருகாமையில் உள்ள மெஷின்களில், எளிதில் ஸ்மார்ட்போன்களை பெற முடியும்.


இந்த திட்டத்தை முதலில் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் வெளியிடவுள்ள இந்த நிறுவனம், பிறகு அனைத்து நகரங்களுக்கும் இதனை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது குறித்து Xiaomi நிறுவனம் தெரிவிக்கையில்., இந்த வெண்டிங் மெஷின் ஆனது எங்கெங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை Xiaomi-ன் Mi.com தளத்தில் அறிந்துகொள்ளலாம். மக்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சம் செய்யவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


பணம் செலுத்த பல வழிகளை கொண்டுள்ள இந்த மெஷினில், மக்கள் நேரடியாக பணம் செலுத்தியோ, அல்லது கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்தி தாங்கள் விரும்பும் ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



Xiaomi நிறுவனம், இந்த வெண்டிங் மெசின்களை முதலில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான விமான நிலையம், மெட்ரோ ஸ்டேசன், ஷாப்பிங் மால்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மெஷினில் மொபைல்போன்கள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளையும் விற்பனைக்கு வைக்கவுள்ளது. மேலும் அதன் விலை தன் தளமான Mi.com-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையின் அளவே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.