குறுந்தகவல் அனுப்பும் முறையை முதன் முறையாக அறிமுகப்படுத்திய யாகூ மெசேஞ்சர் இன்று முதல் தனது சேவை நிறுத்திக்கொள்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1990-களின் காலகட்டத்தில் உலகம் முழுவதும் அவ்வளவாக இன்டர்நெட் பயன்பாடு இல்லை. யாருக்கிடையாவது தொடர்புக்கொள்ள வேண்டும் என்றால், ஒன்று போன் செய்ய வேண்டும், அல்லது மெயில் அனுப்பவேண்டும். இப்பொழுது இருப்பது போல, அப்பொழுது வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசேஞ்சர் உட்பட பல குறுந்தகவல் அனுப்பும் செயலிகள் இல்லை. 


அந்த காலகட்டத்தில் தான் 1998 ஆம் ஆண்டு யாகூ குரூப், யாகூ மெசேஞ்சர் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது இது அனைவருக்கும் வரப்பிரசாதமாக இருந்தது. உடனுக்குடன் தகவகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஏராளமானோர் பயன்படுத்தும் சொல்லாக யாகூ மாறியது. ஒரு காலகட்டத்தில் ஜி மெயிலுக்கு போட்டியாக யாகூ இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் காலப்போக்கில் அதன் மவுசு குறையத் தொடங்கியது. தற்போது வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசேஞ்சர் என பல செயலிகள் வந்துவிட்டது. யாகூ மெசேஞ்சர் செயலியை யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால் யாகூ மெசேஞ்சர் சேவையை ஜூலை 17 ஆம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்க்கு சமூக வலைதளங்களில் பலர் வருத்தம் தெரிவித்ததோடு, மிஸ் யூ யாகூ எனதும் பதிவிட்டு வருகின்றனர்.