பிரபல இணைய தேடல் நிறுவனமான Yahoo, தனது இன்ஸ்டான்ட் மெசேஜிங் செயலியான Yahoo Massenger செயல்பாட்டை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிள் நிறுவனத்திற்கு போட்டியாக செயல்பட்டு வரும் Yahoo-வின் Yahoo Massenger செயல்பாட்டினை வரும் ஜூலை 20 அன்று நிறுத்தவுள்ளது. முன்னதாக கூளில் நிறுவனத்தின் சேட்டிங் செயலியான Orkut செயல்பாடு பயனர்களிடம் குறைந்த நிலையில் அந்த செயலி நிறுத்தப்பட்டது. அதேப்போல் தற்போது Yahoo Massenger செயலியும் நிறுத்தப்படவுள்ளது.


பெரும் எண்ணிக்கையிலான பயணர்களை கொண்டுள்ள Yahoo Massenger இந்தாண்டு மார்ச் மாதத்துடன் 20 ஆண்டுகளை முடித்துள்ளது. இந்நிலையில் தற்போது Yahoo தனது மெசேஞ்சர் செயலிக்கு பதிலாக Squirrel செயலியினை அறிமுகம் செய்யவுள்ளது.


இந்த Squirrel செயலி அறிமுகம் ஆகும் நாள் முதல் Yahoo Massenger செயலியின் செயல்பாடு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் Yahoo Massanger-ல் உள்ள சேட்டிங் இஸ்டரியினை பயனர்கள் தரவிறக்கம் செய்துக்கொள்ள 6 மாதகால அவகாசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக Squirrel செயலியின் சோதனை ஓட்டம் பீட்டா வெர்சன் மூலம் சோதிக்கப்பட்டு வருகிறது.


இந்த புது Squirrel செயலி குறித்து Yahoo தெரிவிக்கையில்... இது மெசேஞ்சருக்கான மாற்று செயலி அல்ல, நாங்கள் புத செயலிகளினை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றோம். அந்த வகையில் தற்போது Yahoo Squirrel செயலியினை அறிமுகம் செய்யவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளது!