கருப்புக்கொடி காட்டுவது திமுகவினரின் உரிமை அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா, மக்களுக்கு குடிநீர், சுகாதாரம், உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் சென்று சேர்ந்துள்ளதா என நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 


இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் இன்று தனக்கு எதிராக திமுகவினர் கருப்புக்கொடி காட்டியது பற்றி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கருப்புக்கொடி காட்டுவது திமுகவினரின் உரிமை அதைப்பற்றி நான் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார். 


மேலும், மதுரை மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை சீரமைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மதுரை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசு திட்டங்களை மே மாதம் 5-க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.