நிர்மலாதேவிக்கு 3-ம் நாள் விசாரணையை தொடர்ந்து நிர்மலாதேவியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்ல சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார். 5 நாட்கள் காவலில் வைக்கபட்ட அவரிடம் இன்று மூன்றாவது நாளாக சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தினர். 


அருப்புக்கோட்டை அருகே உள்ள நிர்மலா தேவி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்களும், அவரது காரில் ரகசிய டைரியும் சிக்கி உள்ளது. நேற்று நிர்மலா தேவி வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் ஆவணங்கள், பென்டிரைவ் போன்றவற்றை கைப்பற்றி வீட்டிற்கு சீல் வைத்தனர். நிர்மலாதேவியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விவாகரத்து செய்ய நிர்மலா தேவி கணவர் முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் 3 நாட்கள் இரவு பகலாக நடத்தப்படும் அதிரடி விசாரணையை தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையாக நிர்மலாதேவிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சாதாரண மருத்துவ பரிசோதனை செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.