25-வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது: உயர்நீதிமன்றம்..!
25-வயதிற்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத அனுமதியில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது!
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வினை எழுத 17 வயது கட்டாயம் நிறைவடைந்திருக்க வேண்டும்.
இதையடுத்து, முன்னதாக நீட் தேர்வு எழுத இந்திய மருத்துவ கவுன்சில் வயது வரம்பை அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திய மருத்துவகவுன்சிலின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது
அதாவது, பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது எனவும், இதேபோல் இடஒதுக்கீட்டு பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது