காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக திங்கள்கிழமை (ஏப்.16) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேற்று மரியாதை செலுத்தினர்.


அந்தவகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் MK ஸ்டாலின் அவர்கள் நேற்று மரியாதை செலுத்தினார். அத்தருணத்தில் அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.


பின்னர் இது குறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:


காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து 16-ஆம் தேதி மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம். 


சித்திரை முதல் நாள்தாம் தமிழ்ப் புத்தாண்டு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாக கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கருணாநிதி சட்டப் பேரவையில் அறிவித்தார். அதுதான் எங்களுக்குப் புத்தாண்டு ஆளுநர் கூறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.