இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.


இந்த கட்டண உயர்வுக்கு மக்களும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.


இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகினர்.  இந்த நிலையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.


இதனால் சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும்,


சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டது. இதன் மூலம் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டது.


எனினும், பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர் கட்சிகள் போராட்டத்தில் வலியுறித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்;- இந்தியாவிலேயே குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார். 


மேலும் அவர், ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை போன்ற காரணங்களால் பேருந்து கட்டணம் உயர்த்தபட்டதாகவும் விளக்கம் தெரிவித்தார்.