கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி திடீர் தீவிபத்து ஏற்பட்டதை தொடா்ந்து, தமிழகத்தின் முக்கிய கோயில்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு கடை உரிமையாளர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இந்த சம்பவம் தொடா்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக மார்ச் 16-ஆம் தேதிக்குள், பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.  


இந்நிலையில், கடை வியாபாரிகள் சார்பில் தொடர்ந்த வழக்கில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், தமிழக கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் கொடுத்துள்ளது. 


இதை தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிப்பதாக உச்சநீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்துள்ளது. 


அப்போது, கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது எனவும், ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் கோவில் நிர்வாகம் நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது!