அமெரிக்கா செல்வதற்கு முன்பு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி.....!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக முகநூலில் எஸ்.வி.சேகர் வெளியிட்ட கருத்து, அவர் தெரிந்து செய்திருந்தாலும், தெரியாமல் செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.


கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு கொண்டு சென்ற பேராசிரியர் நிர்மலா தேவியின் செயல் ரொம்பவே வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.


அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த பிறகு, விமர்சனங்கல் எழுவதை தவிர்க்க முடியாதவையாகும்.


மேலும், சீருடையில் உள்ள காவலர்களைத் தாக்கியதை எந்தவிதத்திலும் ஏற்க முடியாத செயலாகும் என்றார்.
 
பின்னர் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அவர் கூறுகையில்...! 


நான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் தெரியாது. கண்டிப்பாக உங்களுக்கு (பத்திரிகையாளர்கள்) சொல்லாமல் அதை செய்ய முடியாது. சரியான காலத்தில் அதை தெரிவிப்பேன் என்றார்.


இதையடுத்து, அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி நாடு திரும்பிய பிறகு அரசியல் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.