15:38 27-04-2018
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் பதில் கூறியுள்ளது.



14:27 27-04-2018
ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.



13:49 27-04-2018


ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் அறிவித்தப்படி இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்குவது என தங்களுக்கு தெரியும் என்று  உயர்நீதிமன்றம் பதில் தெரிவித்துள்ளது.



13:15 27-04-2018
இவருடைய முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


இதற்கு பதில் அளித்த தேவராஜன், 18 எம்.எல்.ஏக்கள் பெரியதா? 11 எம்.எல்.ஏக்கள் பெரியதா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார். 



13:07 27-04-2018


பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முறையீடு செய்துள்ளார். 


18 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தரக்கூடாது என்றும் அவர் பதில் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். 


இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்தநிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்ககோரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தமிழக கவர்னரிடம் புகார் அளித்தனர்.


இதையடுத்து, முதல்வருக்கு எதிராக வாக்களித்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,  இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 


தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வில் 2 மணியளவில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.