ராகுல் காந்தி வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு கோரிக்கை!
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு நேற்று முதல் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
வட கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சிறிது நேரத்துக்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. ராகுல் காந்தி உள்பட அனைவரும் பத்திரமாக இறங்கினர்.
விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சி கோரிக்கை டில்லி விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றனர்.