டெல்லி: ஊழல் குற்றச்சாட்டு மற்றும் துறை ரீதியான விசாரணையில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு தடை செய்துள்ளது.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் இனி வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் 'விஜிலென்ஸ்' எனப்படும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து, மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியுள்ளது....! 


லஞ்சம், ஊழல் வழக்குகளில் சிக்கி, துறை ரீதியான விசாரணைக்கு ஆளாகியுள்ள அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்ட நபருக்கும், பாஸ்போர்ட் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிகாரிகள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு 'விஜிலென்ஸ் கிளியரன்ஸ்' அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் வந்தால் அப்போது மட்டும் அனுமதிக்கப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.