தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்களை வந்த வாகனங்களை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் திடீரென கல்வீசி தாக்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்தும், நிரந்தரமாக  ஆலையை மூட வலியுறுத்தியும்  தூத்துக்குடி பகுதி  மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன தரப்பில் ஆலையை புதுப்பிக்கக்கோரி,  தமிழ்நாடு  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம்  ஒரு மனு அளிக்கப்பட்டது. 


தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூடுதல் விபரங்கள் வேண்டும் என கூறி அந்த மனுவை நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் வேதாந்தா குழு நிறுவனம், பங்குச்சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.


இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை ஸ்டெர்லைட் ஆலை முன்பு திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.


இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊழியர்களை வந்த வாகனங்களை ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் திடீரென கல்வீசி தாக்கினர். இதில் இரண்டு பேருந்துகள், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிறுமி உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.