அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கும் திட்டத்துக்கு 87% கிராமப்புற மக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு திட்டங்கள், சலுகைகளைப் பெற தற்போது ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகின்றது. அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.


இந்நிலையில் அரசு வழங்கும் நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கலாமா? என்ற கேள்வியுடன் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 87% கிராமபுற மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அதேப்போல் தனியார் சேவைகளுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கலாம் என 77% பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.


இந்த ஆய்வானது ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களின் கிராமப்புறங்களில் நடத்தப்பட்டுள்ளது. 


மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அடையாள ஆவணமாக ஆதாரின் அனலாக் வெர்சனை பயன்படுத்தி உள்ளதாக 66.9% பேரும், 17.2% பேர் இணையதள KYC முறையைப் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இத்தகைய தேவைகளினாலே ஆதாரினை அவசியம் செய்து வருவதாக UIDAI தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு பகுதியாக போலி வாக்களார்களை கண்டறிய வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்னை அவர்களது வாக்காள் அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.


கடந்த மாதம் UIDAI வெளியிட்ட தகவலின் படி இதுவரை 32 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!