17:17 10-05-2018
நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலா தேவிக்கு ஜாமீன் கோரிய மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. 


தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதையடுத்து, கைது செய்யப்பட்டு அவரிடம், சி.பி.சி.ஐ.டி., மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடக்கிறது. 


இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணைபோன முருகன், கருப்பசாமி ஆகிய மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்நிலையில், நிர்மலாதேவி பல்கலைகழக மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோடைக்கால நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. நிர்மலா சார்பில் வழக்கறிஞர் ராமநாதன், மதுரை வழக்கறிஞர் மகாலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.