காவிரிக்கான போராட்டம் வன்முறையாகக் கூடாது: கமல்ஹாசன்!
காவிரிக்கான போராட்டம் வன்முறையாகக் கூடாது என்றும் போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறலாம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரிக்கான போராட்டம் வன்முறையாகக் கூடாது என்றும் போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறலாம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர்.
போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மேலும், இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படுவது அடக்குமுறை என்றார்.
போராட்டத்தை அடக்கும்போது அது வன்முறையாக மாறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். காவிரிக்கான போராட்டம் வன்முறையாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை கொள்கையை முன்னெடுப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.