தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: CB-CIDக்கு வழக்கு மாற்றம்!
13 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை CB-CID விசாரணைக்கு மாற்றி DGP TK Rajendran உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி : 13 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை CB-CID விசாரணைக்கு மாற்றி DGP TK Rajendran உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை சற்று முன்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை CB-CID விசாரணைக்கு மாற்றி DGP TK Rajendran உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வழக்கை இதுவரை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது இவ்வழக்கை CB-CID விசாரணைக்கு மாற்றி DGP TK Rajendran உத்தரவு பிறப்பித்துள்ளார்.