தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த 22-ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்து இதுகுறித்து விசாரணை தூத்துக்குயில் தொடங்கியுள்ளார்.


இந்நிலையில் இன்று சட்டபேரவையில் இச்சம்பவம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக-வினர் வெளிநடப்பு செய்துள்ளனர். வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...


"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே இச்சம்பவம் குறித்து CBI விசாரணை நடத்தக் கோரிக்கை விடுக்கு திமுக என்னியதாகவும், இதுகுறித்து பேச முன்கூட்டியே அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதுகுறித்து பேசுவதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்து விட்டார்.


இதனைக் கண்டிக்கும் வகையில் அவையில் இருந்து திமுக-வினர் வெளிநடப்பு செய்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்!