தன்னை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம்: ஓ.பன்னீர் செல்வம்!
தன் பெயரை சொல்லி அழைக்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் என கூற வேண்டாம் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்!
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று மீண்டும் கூடியது. இன்றைய சட்டமன்ற கூட்டத்தின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
சட்டசபைக்கு மீண்டும் செல்ல உள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து கடந்த 4 நாட்களாக அவையை புறக்கணித்த திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,,! தன் பெயரை சொல்லி அழைக்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் என சட்டப்பேரவையில் கூற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என்றும் அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் இருந்த நேரத்தில் ஜல்லிக்கட்டிற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது என்றார்.