தமிழக அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மாணவர்களும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அரசு பள்ளிகளை நடத்திவருகிறது. இதைதவிர அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.


இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்னம் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வி துறை நேற்று உத்தரவிட்டுள்ளது. 


இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "நகர்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். அதேப்போல் கிராமப்புற அரசு மேல்நிலை பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் வகுப்புகளையும் மூட வேண்டும்" என தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவால் கிராமப்புறங்களில் இருக்கும் பல பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.