தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் மூட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயம், இயற்கை வளம், வருங்கால சந்ததிகளை காக்க வேண்டும் போன்ற நோக்கத்தை முன்னிருந்தி, தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் படிப்படியாக மூட வேண்டும். ஜல்லிக்காக மட்டுமே கிரானைட் குவாரிகள் இயக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதே போல் சட்டவிரோதமாக மணல், கிரானைட் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.