உத்திர பிரதேஷத்தில் காவல்துறையினர் நடத்திய இருவேறு துப்பாக்கி சூட்டில் இரண்டு தேடப்பட்ட குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உபி-யின் நொய்டாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான ஷர்வான் சௌத்திரி இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் சுட்டுப் பிடிக்கப்பட்டார். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவரை பிடித்து தருபவருக்கு சுமார் 1 லட்சம் வரையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.


இந்தச் சம்பத்தில் பிடிப்பட்ட ஷர்வான் இடம் இருந்து ஒரு AK-47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மற்றொரு சம்பவத்தில், ஷரான்பூர் பகுதியில் இன்று விடியற்காலை சுமார் 2 மணியளவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றலாளி ஆஷன் அகா சலீம் என்பவர் சுட்டப் படிக்கப்பட்டார். காயங்களுடன் மீட்கப்பட்ட இவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி இவர் பலியானார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இச்சம்பவத்தில் பலியான சலீம் உடன் மற்றொரு குற்றவாளி இருந்ததாகவும், துப்பாக்கிசூட்டின் போது அவர் காவல்துறையிடம் இருந்த தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,


இச்சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 லட்சம் பணமும், துப்பாக்கி, தோட்டாக்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் காவல்துறை அதிகாரி சச்சின் குமார் காயங்களுடன் உயிர்பிழைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.