முஷாபர்நகர்: உத்திரப்பிரதேச மாநில பெண்மனி ஒருவர் தனது மைத்துனரால் துப்பாக்கி முனையில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரப்பிரதேச மாநிலம் முஷாபர்நகரில் வீட்டில் தனியாக இருந்த பெண்மனி ஒருவரினை அவரது மைத்துனர் துப்பாக்கி முனையில் வன்புதணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். 


நேற்று மாலை நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்மனியின் கணவர் மருந்து வாங்க வெளியே சென்றதாகவும், அப்போது அத்துமீறி அவரது வீட்டில் நுழைந்த அவரது தம்பி இந்த கொடூர சம்பவத்தினை செய்ததாகவும் பவோப்பா காவல் நிலைய அதிகாரி விஜய் சிங் தெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் போரில், குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மனி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 


இச்சம்பவத்தை குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் குற்றம்சாட்டப்பட்டவர் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட பெண்மனி தெரிவித்துள்ளார்.