தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வாழ்க்கை திரைப்படமாக தயாராகிறது. இப்படத்திற்கு பெயர் The Raging Tigers (சீறும் புலிகள்) என பெயரிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக தமிழர்களால், தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையினை திரைப்படமாக தயாரிக்க ஸ்டுடியோ 18 நிறுவனம் முன்வந்துள்ளது.


https://stt.india.com/tamil/sites/default/files/TheRagingTigers_0.jpg


உனக்குள் நான்(2015), லைட்மேன்(2016), நீலம்(2017) போன்ற திரைப்படங்களை வழங்கிய இந்நிறுவனம் தற்போது தமிழர்களின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையினை படமாக எடுக்கவுள்ளது.


இப்படத்தினை இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்குகின்றார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரகள், மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!