மகாராஸ்டிர விவசாயி ஒருவர் தன் நிலத்தில் விளைந்தப் பொருட்களா தானே அழித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜால்னா மாவட்டத்தின் போயிகோன் கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி ப்ரேம்சில் சாவன். தன் நிலத்தில் விலைந்த முட்டை கோஸ்களை சந்தைக்கு எடுத்து சென்று விற்றதில் அவருக்கு கிடைந்த லாபம் வெறும் 442ரூ மட்டுமே. இதனால் ஆத்திரமடைந்த அவர் தன் நிலத்தில் மீதம் இருந்த காய்கறிகலையும் தானை நாசம் செய்தார்.


இந்த நிகழ்வினை அவரது நண்பர் வீடியோவாக பதிந்து சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணைத்தில் வைரலாக வளம் வருகின்றது.



இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி தெரவிக்கையில், "நான் என் தோட்டத்தில் முட்டை கோஸ் மற்றும் தக்காளி பயிரிட்டேன். அதற்காக நான் செலவு செய்தது 40000 ரூபாய். ஆனால் தற்போது விலைப்போனது வெறும் 4000 ரூபாய்க்கு மட்டுமே. இதனால் எனக்கு ஏற்பட்ட நஸ்டத்தினை ஈடுசெய்ய இயலாது" என தெரிவித்துள்ளார்.


மேலும் தன் வாழ்க்கையினை முடித்துக்கொள்ளம் அளவிற்கு துயரத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் அவர் தெரவித்தார்.