குரல் வளம் வேண்டி தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாயவரம் சீர்காழி அருகே உள்ள ஒரு அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சமீபகாலமாக குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பேச்சு பலருக்கும் புரியாமல் இருந்தது. இதன் காரணமாக அவர் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்தார். 


இந்நிலையில் சீர்காழியில் பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினால் குரல் வளம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இதையடுத்து விஜயகாந்த் இந்த கோவிலில் வழிபாடு நடத்தினார்.