மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். 


நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு எழுத பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாணவர்களை உடலளவிலும் மன அளவிலும் சோர்வடைய வைத்துள்ளனர். 


நீட் தேர்வு எழுதுவதற்கான மையங்கள் தமிழக மாணவர்களுக்கு பெரும்பாலும் வெளிமாநிலங்கலான கேரளா மற்றும் ராஜஸ்தானில் போடப்பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் போடப்பட்டுள்ளதால அவர்கள் பொருளாதார அடிப்படையிலும் மனதளவிலும் பாதிப்படைவார்கள் எனவும் அவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்குமாறு தெரிவித்தனர். இதற்க்கு சி.பி.எஸ்.சி மறுப்பு தெரிவித்தது.


இதையடுத்து தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கியது. வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு இலவச ரயில் பயணசீட்டு மற்றும் தலா 1,000 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்தது. 


இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் வைகோ தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது எனவும் நீட் தேர்வை எதிர்க்கிறோம்; தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில் மத்திய அரசு உள்ளது என தெரிவித்துள்ளார்.