பாஜக-விற்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டணி ஏற்படுமா?
பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் எதிர் கட்சிகள் அனைத்தையும் ஒன்றினைத்து புதிக கூட்டனியை அமைக்க பிரதான கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
புதுடெல்லி: பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் எதிர் கட்சிகள் அனைத்தையும் ஒன்றினைத்து புதிக கூட்டனியை அமைக்க பிரதான கட்சிகள் திட்டமிட்டு வருகின்றனர். இந்த வகையில் முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சமீபத்தில் எதிர்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.
இதனையடுத்து தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் இன்று இரவு தனது வீட்டில் எதிர்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி டெல்லி வந்துள்ளார்.
4 நாள் பயணமாக கொல்கத்தாவில் இருந்து நேற்று டெல்லி வந்த அவர் இன்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தை சந்தித்தார். இச்சந்திப்பிற்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவாரை பானர்ஜி சந்தித்தார்.
இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கின்றார். இதற்கிடையில் பாஜக-விற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பது குறித்து மம்தா-வுடன் சோனியா பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜக, காங்கிரஸ் ஆட்சி இல்லாத 3 வது கூட்டணியிஐ அமைப்பது குறித்து முன்னதாக மம்தா தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.