`மன் கி பாத்`: இயற்கையை காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!!
இயற்கையை காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அனைவரும் முன் வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்!
இன்றைய "மன் கி பாத்" நிகழ்ச்சியில் இயற்கையை காக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அனைவரும் முன் வர வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாதாந்திரம் வானொலி மூலமாக மக்களிடையே, பிரதமர் மோடி "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையினில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று பேசியதாவது..!
பிளாஸ்டிக்கை தவிர்க்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்.
சுத்தமான சுற்றுப்புறசூழலுக்கு அனைவரும் உறுதிபூண மரம் நட வேண்டும். இதன் மூலம் நம்முடைய இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க முடியும்.
தொடர்ந்து பேசிய அவர்..!
இந்திய பெண்களை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. அவர்கள், திறமையை வெளிப்படுத்த பெண்கள் கடற்படையில் இணைய முன் வரவேண்டும். 254 நாட்கள் பாய்மர படகு மூலம் கடல்வழியாக உலகை சுற்றிவந்த கடற்படை வீராங்கனைகளுக்கு என்னுடைய பாராட்டு தெரிவிக்கிறேன்.
பாரம்பரிய விளையாட்டு வீரரான விராத் கோஹ்லி விட்டது சவால் மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரும் பிட்இந்தியா இயக்கத்தில் பங்கேற்பது, அவசியம் அதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டு மூலம் தங்களுடைய திறமைகளை நிரூபிக்கலாம். அதில், பாரம்பரிய விளையாட்டுகள் முக்கியமானவை என்றார்.