சூரத்தில் உள்ள வர்ஷா என்ற பகுதியில் இந்த லேடி டான் கையில் வாளுடன் பைக்கில் சென்று கடைகாரர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வருகிறார். இதனால் இவரது குடும்பத்தார் இவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். தற்போது இவரது காதலருடன் வசித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தெருவில் எந்த வித பயமின்றி கையில் வாளுடன் அனைவரையும் மிரட்டி பணம் வசூலித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் கடைகாரர்களை மிரட்டி பணம் வசூல் செய்துள்ளார். 


வீடியோ:



பான் கடைக்காரரை மிரட்டி பணம் வசூல் செய்த வீடியோ வைரலானதால், மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இவர் மீது யாரும் இதுவரை எந்த ஒரு புகாரும், குற்றச்சாட்டும் தெரிவிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


20 வயதான லேடி டானின் பெயர் அஸ்மிதா பா கோஹில். இவரது காதலன் பெயர் ராகுல். அவரது ஃபேஸ்புக் கணக்கைப் பொறுத்தவரை, 2,500 க்கும் அதிகமான நண்பர்கள் மற்றும் 12,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர் தனது முகநூலில் "சுய தொழில்" ("self-employed") என்று பதிவிட்டுள்ளார்.