#Sterlite குறித்து பேச திமுக-விற்கு அனுமதி மறுப்பு; ஏன்?
ஸ்டர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து பேச திமுக-விற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டடுள்ளது.
ஸ்டர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து பேச திமுக-விற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டடுள்ளது.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திகடந்த 22-ம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமித்து இதுகுறித்து விசாரணை தூத்துக்குயில் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று சட்டபேரவையில் இச்சம்பவம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி திமுக-வினர் வெளிநடப்பு வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் தற்போது திமுக-விற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியாகியுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...
"ஸ்டெர்லைட் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து முழு விசாரணை மேற்கொள்வதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தலைமையிலே விசாரணை தொடங்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆகவே, நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவத்தை பற்றி, பொருளைப் பற்றி, அவையிலே விவாதிப்பது, மரபல்ல. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, அப்பொழுது அமைச்சராக இருந்து, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற துணைத் தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய திரு.துரைமுருகன் அவர்களே, இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பொருளைப் பற்றி அவையிலே பேசுவது மரபல்ல என்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்படையிலே, எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பாக விசாரணை கமிஷனிலே அளிக்கலாம் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிடப்பட்டுள்ளது.