உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் மே 1ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா நோய் ஏற்படுவதால் மூச்சுக்குழலில் உள்ள சுவாச சிறுகுழல் சுருக்கம் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இதனால், மூச்சு திணறல் உண்டாகிறது. இந்நோயினால் உலகம் முழுவதும் 30 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். 


இந்நோயின் அறிகுறியாவன......!


இரவில் இருமல் அதிகரித்தல், உடலில் இருமலும், மூச்சிறைப்பும் அதிகரித்தல், எளிதாக செய்யக்கூடிய வேலைகளின் போது களைப்பை உணர்தல், முறையற்ற தூக்கத்தில் எழும் போது களைப்பை உணர்தல் ஆகியவை இந்நோய்க்கான தீவிரம் அடைதலை குறிக்கிறது.


பூச்சியின் கழிவுகள், மரங்கள் மற்றும் பூக்களின் மகரந்தத் துாள், சிகரெட் புகை, காற்றில் உள்ள மாசு, குளிர்ந்த காற்று, வெப்பநிலை மாற்றம், வயிறு மற்றும் உணவுக்குழாய்ப் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவைகளும் இதன் அறிகுறிகளாகும். 


ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மட்டும் சராசரியாக15- 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆஸ்துமா என்பது, மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக்குழாயைப் பாதிக்கும் ஒரு ஒவ்வாமை நோயாகும். 


இதில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள். அதிலும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்குதான் ஆஸ்துமா நோயின்தாக்கம் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.


ஜினியா அமைப்பின் ஆய்வின்படி 2025 ஆண்டின்படி 400 மில்லியன்களாக ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை உயரும் என கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 10 சதவீதம் இந்தியர்களாக இருப்பார்கள் எனவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. 2.50 லட்சம் ஆஸ்துமா நோயாளிகள் ஆண்டு தோறும் உருவாவதாக 2005ம் ஆண்டிற்கான உலக சுகாதார ஆய்வு நிறுவனம் கூறுகிறது. 1 லட்சம் மக்கள் தொகையில் 5 சதவீதம் பகுதியினர் ஆண்டுதோறும் ஆஸ்துமா நோயினால் இறப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. 


ஆஸ்துமா கட்டுப்பாடு....!


ஆஸ்துமா பிரச்னைக்கு .கர்ப்பிணி பெண்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் இருக்காது. இது குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது. ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைப்பது அனைத்து ஆஸ்துமா நோயாளிக்களுக்கும் அவசியமான. 


மூச்சு பயிற்சி மற்றும் வலி நிவாரணி மருந்துகளை தவிர்ப்பதன் மூலமும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்.