2019 ஜனவரி 23,24ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது -கொள்கை விளக்க குறிப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழநாட்டில் நிலவும் அமைதியான சட்ட ஒழுங்கு சூழ்நிலை, தடையற்ற மின்சாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, பல சர்வதேச வமான நிலையங்கள், பன்முக துறைமுகம் மற்றும் திறன்மிக்க மனித ஆற்றல் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்கி வருகிறது. இவை உள் நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்காலை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. 


மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடந்தது. இதில், 800-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இம்மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 96,341 நபர்களுக்கு முதல்லேடும் கிடைத்தது. இதையடுத்து, 2019 ஜனவரி 23,24ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கொள்கை விளக்க குறிப்பு இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 2019 ஜனவரி 23, 24-ம் தேதிகளில் நடைபெறும் எனவும் இதற்காக சுமார் ரூ.75 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!