ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில்: 100 பேர் பலி
ஈராக்கில் வழிபாட்டு தலம் கர்பாலா நகரில் உள்ளது. வழியில் ஹில்லா என்ற நகரில் பெட்ரோல் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப பஸ்களை நிறுத்தியிருந்தனர்.
பாக்தாத்: ஈராக்கில் வழிபாட்டு தலம் கர்பாலா நகரில் உள்ளது. வழியில் ஹில்லா என்ற நகரில் பெட்ரோல் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப பஸ்களை நிறுத்தியிருந்தனர்.
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பாக்தாத் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஹில்லா நகரில் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெட்ரோல் பங்கிற்கு வந்த டிரக் வெடித்ததில் அங்கிருந்த 100 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். தாக்குதலில் உயிரிழந்த ஈரான் நாட்டு யாத்ரீகர்கள் வந்த 5 பேருந்துகள் தீக்கிரையாகின.
இதில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரானை சேர்ந்த யாத்ரீகர்கள் ஆவர். ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் மீண்டும் ஈராக் ராணுவ வசமானது. எனவே, அதற்கு பழிவாங்க இது போன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகளின் இத்தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நாட்டு செய்தி தொடர்பாளர் கூறும் போது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஈராக்குக்கு ஈரான் ஆதரவு தொடரும் என கூறியுள்ளார்.