11 பேர் பலி: அரை கம்பத்தில் கொடிகள் பறக்கும்: அமெரிக்க அதிபர்!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியான நிலையில் அந்நாட்டில் கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பிட்ஸ்பர்க் நகரிலுள்ள யூதர்கள் ஜெபக்கூடம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் முதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.தற்போது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க நீதி துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை வெள்ளை மாளிகை, ராணுவ நிலைகள், கப்பற்படை தளங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள அனைத்து கொடிகளும் அரை கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.