சனிகிரகத்தை ஆய்வு செய்த நாசாவின் காசினி விண்கலத்தின் 13 ஆண்டுகால பயணம் இன்றுடன் நிறைவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாசாவால் 1997-ம் ஆண்டு காசினி-ஹியூஜென்ஸ் என்ற விண்கலம் சூரிய குடும்பத்தில் 2_வது மிகப்பெரிய கிரகமான சனிகிரகத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடம் கழித்து சனிகிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் 2004-ம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு காசினி விண்கலம் சனிகிரகத்தை பற்றி ஏராளமான தகவல்களை நமக்கு தந்துள்ளது. இன்றுடன் காசினி விண்கலத்திற்கு 13 ஆண்டுகால பயணம் முடிவடைகிறது. இன்று முதல் இந்த விண்கலம் செயலிழந்துபோகும்.


இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்த விண்கலம் மணிக்கு 1,20,000 கிமீ வேகத்தில் பயணித்து வெடித்து சிதறும் என நாசாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை நேரடியாக நாசா தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் ஒளிபரப்பு செய்கிறது.