கடந்த 10 மாதங்களில் ஒரே பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் கர்ப்பமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாவட்டத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் இரண்டாம் நிலை பள்ளி மாணவிகள் 16 பேர் கர்ப்பமாகி உள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், எங்களின் HIV தடுப்பு செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதில் டீன் ஏஜ் கர்ப்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஓர்டன் பள்ளியில் 16 மாணவிகள் கடந்த 10 மாத காலத்தில் கர்ப்பமாக ஆகியுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் சில மாணவிகள் பள்ளிக்கு வராமல் எங்கோ ஓடி விட்டார்கள். கர்ப்பமான மாணவிகள் அனைவரும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள் ஆவார்கள்.


பள்ளிக்கூடம் அருகில் உள்ள பகுதிகளில் சுரங்க தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் அமெரிக்க டாலர்களை தான் ஊதியமாக பெறுகிறார்கள். இதை காட்டி மயக்கி மாணவிகளை தங்கள் வலையில் வீழ்த்துகிறார்கள் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதை தடுக்க மாணவிகளின் பெற்றோர்களும், சமூக தலைவர்களும் உதவ வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.