இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்ச்ஸில் அவரது முன்னாள் காதலனால் கேபிள்களால் சுற்றப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாரிக்ஜோத் சிங் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. விசாரணையின் போது நீதிமன்றத்தில் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கவுரை கடத்திச் சென்று கொன்றதாக சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் கொலை செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். சிங் அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் கண்டுபிடித்த அந்த ஆழமற்ற இடத்தில் புதைத்திருந்தார். 


அவர்களது உறவில் ஏற்பட்ட முறிவைக் ஏற்றுக்கொள்ள முடியாமல் சிங் அந்த பெண்ணை கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஜாஸ்மீன் கவுரின் தாயார் ரஷ்பால், சிங் தனது மகள் மீது வெறித்தனமாக இருந்ததாகவும், அவரின் காதலை நூறு முறை மறுத்ததாகவும் கூறினார்.


மேலும் படிக்க | வாடகைக்கு அப்பாக்களை எடுக்க சிறப்பு வசதி! இது நல்லா இருக்கே!


ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள அவரது பணியிடத்தில் இருந்து கவுரை சிங் கடத்திச் சென்று அந்த பெண்ணுடன் காரை பூட்டி நான்கு மணி நேரம் ஓட்டிச் சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு ஆழமற்ற கல்லறையில் அந்த பெண்ணின் உடல் கண்கள் கட்டப்பட்டு, கால்கள் கேபிள் டை மற்றும் கேஃபர் டேப்பால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.


"அந்த பெண் மிகவும் மோசமான மரண அனுபவத்தை அனுபவித்துள்ளார். அந்த இடத்தில் மூச்சு முட்டி, மண்ணை தின்று அங்கேயே கொஞ்சமாக கொஞ்சமாக உயிரைவிட்டுள்ளார்" என பாதிக்கப்பட்டவர் தரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விவரித்தார். உயிரிழந்த பெண் கவுரின் தாய் உட்பட அவரின் குடும்பத்தினர், கவுர் தனது இறுதித் தருணங்களில் எதிர்கொண்டதை நினைத்து வேதனை அடைந்ததாக கூறியுள்ளனர்.


இதுகுறித்து கவுரின் தாய் கூறுகையில்,"நான் ஒரு பயங்கரமான நிகழ்வுகளை கடந்து செல்கிறேன். ஜாஸ்மீன் மரண ஆபத்தில் இருப்பதை எப்போது உணர்ந்தாள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். ஜாஸ்மீன் காப்பாற்ற யாரும் அங்கில்லை, இந்த பூமியில் தனது கடைசி மணிநேரத்தை மிக மோசமாக ஜாஸ்மீன் கழித்துள்ளார். ஜாஸ்மீன் போய்விட்டாள், நான் மனம் உடைந்தேன், அவள் ஒரு பொக்கிஷம். சிங் செய்ததை மன்னிக்க மாட்டேன்" என்றார். அந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் படிக்க | இதுக்கெல்லாமா Service பண்றீங்க? ஜப்பானில் நடக்கும் விநோத சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ