சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகில் சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன.  இத்தாக்குதலை ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்காக வைத்தனர்.  இந்த சம்பவத்தில் 17 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, அர்பின் நகரில் நடந்த தாக்குதலில் 4 பேரும் மற்றும் மிஸ்ரபா மற்றும் ஹரஸ்தா நகரங்களில் நடத்திய தாக்குதலில் 6 பேரும் பலியாகி உள்ளனர்.இதுபற்றி ஹமோரியா பகுதியில் வசித்து வரும் சாதிக் இப்ராகிம் என்பவர் கூறும்பொழுது, பொதுமக்களே தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.  ஒரு ஜெட் விமானம் எங்கள் மீது தாக்குதல் நடத்தியது.  அது வன்முறையாளர்களையோ அல்லது சோதனை சாவடி பகுதிகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை என கூறியுள்ளார்.


இதனை மறுத்துள்ள சிரிய அரசாங்கம் மற்றும் ரஷ்யா, தங்களது ஜெட் விமானங்கள் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசவில்லை என்றும் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளையே தாக்கினோம் என்றும் தெரிவித்துள்ளது.