ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 


இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் தற்போது ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.


இந்நிலையில், சொகுசு கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜப்பான் கப்பலில் உள்ள 400 அமெரிக்கர்கள், சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும், அமெரிக்காவில் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்ட முகாமில் வைத்து அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.