காபுல்: ஆப்கானிஸ்தான் தற்கொலை படைத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வாய்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி இந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 30 பேர் காயமுற்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இன்று இத்தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை!


சம்பவ இடத்தில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்கள், அப்பகுதியில் பெறிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளைப் பொறுத்தவரையில், முதல் தாக்குதல் நுழைவாயிலின் முற்பகுதியில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலானது, ஆப்கானிஸ்தானில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிலைய ஊழியர்களில் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஒரு மாதம் கழித்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.